Latestஇந்தியாஉலகம்

ஆண் நண்பர்களுடன் பழகிய மாடல் அழகி:-முகத்தை சிதைத்த காதலன்!!

நாக்பூர்,ஜூலை.16- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சேர்ந்த பிரபல மாடல் அழகி குஷ் பரிகார் வயது 19 .இவருக்கும் அஷ்ராப் சேக் என்ற இளைஞனுக்கும் காதல் இருந்தது.

இந்நிலையில் தொழில் ரீதியாக சில ஆண்களிடம் குஷ் பரிகார் பழகி வந்ததாக தெரிகிறது. அதனால் அஷ்ராப்புக்கு தனது காதலி ஆண் நண்பர்களுடன் பழகுவதை அவர் விரும்பவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது காரில் குஷ் பரிகாரை அழைத்து கொண்டு சில நாட்களுக்கு முன்னர் நாக்பூர் சாலையில் அஷ்ராப் சென்று கொண்டு இருந்தார் .அப்போது காதலன் காதலிக்கு இடையே வாக்குவாதம் மீண்டும் எழுந்துள்ளது துரிய வருகிறது.

இதில் கோபமடைந்த அஷ்ராப் காதலியின் முகத்தை சிதைத்து அடித்து கொலை செய்து கொன்று வீசிவிட்டார். இதனையடுத்து பொதுமக்கள் சாலையில் அடையாளம் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .

பின்னர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலன் உதவியால் கொலை செய்யப்பட்டவர் குஷ்பரிகார் என்பது கண்டுபிடித்தனர்.

இக்கொலை குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலையாளி அஷ்ராப் என போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கூறிய வாக்கு மூலத்தில், குஷ் பரிகார் ஆண் நண்பர்களுடன் பழகுவது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால் அவரை அவரின் முகத்தை சிதைத்து படுகொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.இச்சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker