Latestமலேசியா

ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை முறியடிக்க சர்வதேச கூட்டமைப்பு !

காஜாங், ஜூலை.16- சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை முறியடிக்க மலேசிய போலீஸ்படை சர்வதேச அமலாக்க இலாகாக்களுடன் இணைந்து செயல்ப்படவுள்ளது என அதன் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள மலேசிய காவல்படை சிங்கப்பூர் அமலாக்க பிரிவுடன்  இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

ஆண்லைன் சூதாட்டம் கடும் குற்றமாக கருதப்படுகின்றது. எனவே இவ்விவகாரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளோம். கூடிய விரைவில் அந்த திட்டங்களை அரசங்கத்தின் பார்வைக்கும் கொண்டு செல்வோம்.

அதே வேளையில் சாதாரண சூதாட்ட நடவடிக்கைகளை முறியடிக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை முடிவுகள் திருப்தி அளிக்கின்றது. பெரும்பாலான சூதாட்ட மையங்கள் மூடப்பட்டு விட்டன என செமினியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இதனிடையே சூதாட்ட மையங்கள் தொடர்ந்து செயல்ப்படும் பகுதிகளை சார்ந்த காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker