Latestமலேசியா

இந்தியர் நலனைக் காக்க:  மலேசிய முற்போக்குக் கட்சி – தொடங்கினார் வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை 16 – நாட்டின் இந்தியர்களின் நலனைக் காக்க மலேசிய முற்போக்குக் கட்சியைத் தொடங்குவதாக பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி அறிவித்தார்.

மலேசிய முற்போக்குக் கட்சி சங்கங்களின் பதிவதிகாரியால் அங்கீகரிக்கப் பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமூகத்தின் நலனைக் காக்கவும் மேம்படுத்தவும் கட்சி அதன் நோக்கங்களை அடைய முனைப்பு காட்டும். இந்தியர்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், சமயம் மற்றும் சமூகவியலில் மேம்பாடு காண கட்சி பாடுபடும் என அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் அரசினால்  வழங்கப்படும் சலுகைகள், உதவிகள் யாவும் அடிமட்ட மக்களுக்குச் சென்றடைய கட்சி உறுதி செய்யும்.

புதிய கட்சியை வழிநடத்தவிருக்கும் தாம்,  ஹிண்ட்ராப்பின் தலைவர் பதவியைத் துறப்பதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

ஹிண்ட்ராப்பின்  பொதுக்கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு  புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker