Latestஇந்தியா

இன்று சந்திர கிரகணம்! சிறப்பு தரிசனங்கள் ரத்து

சென்னை, ஜூலை. 16 – பூரண சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இது இந்தியாவில் வெறும் கண்ணால் பார்க்க முடியும் .சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது .

அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால் அது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதன்படி பூரண சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12 .13 தொடங்குகிறது. பின் ஒன்று 1.31க்கு உச்சமடைந்து அதிகாலை 4.30 க்கு முடிகிறது.

சந்திர கிரகணத்தன்று தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் .ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே சந்திரகிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன் ஆடி மாதம் பிறந்த பின் மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோயிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker