Latestஇந்தியா

ஐபோனுக்காக 15 வயது சிறுவன் படுகொலை:- 3 சிறுவர்கள் கைது

புதுடில்லி,ஜூலை.16- ஐபோன் மோகத்தால் 15 வயது சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தலைநகர் டில்லியில் இச்சம்பவம் நிகழ்ந்த்து.

இது தொடர்பாக டெல்லி கமிஷனர் மோனிகா பரத்வாஜ் கூறுகையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி விக்கி வயது 15 என்பவரை காணவில்லை என என மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் தாராப்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சிறுவனின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது .இதையடுத்து அவரது உறவினருடன் சென்று ஆய்வு செய்தபோது அது காணாமல் போன விக்கியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கிருந்த சிசிடிவி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணை ஐபோன் திருட முயன்ற போது அதை தர மறுத்ததால் விக்கியை கொலை செய்ததாக அந்த மூன்று சிறுவர்களும் ஒப்புக்கொண்டனர். இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப் பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker