Latestமலேசியா

சிபிபியிலிருந்து பணம்: பெற மலேசியாவுக்கு உரிமை உண்டு – துன் மகாதீர்

புத்ரா ஜெயா, ஜூலை 16 – எண்ணெய்க் கூழாய்கள் பொருத்தும் 2 திட்டங்களில் செய்து முடித்த பணிக்கு அதிகமாகவே பணம் செலுத்தப்பட்டிருப்பதால் அதனைப் பெற மலேசியாவுக்கு உரிமை உள்ளதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

சீனாவின் சீன பெட்ரோலியம் பைப்லைன் எஞ்சீனியரிங் நிறுவனத்துக்கு(சிபிபி) அந்த இரு குத்தகைத் திட்டங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

அந்திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதால், கூடுதலாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அந்த நிறுவனத்திலிருந்து பெறுவதே நியாயமாகும்.

அந்நிறுவனம் இது வரை 13 விழுக்காட்டுப் பணியை மட்டுமே செய்திருக்கும் வேளையில் அதற்கு மொத்தத் தொகையிலிருந்து 80 விழுக்காட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

பணத்துக்கு ஏற்ற வகையில் பணி செய்து முடிவிக்கவில்லை என்ற காரணத்தால்,
கடந்த சனிக்கிழமை, அந்நிறுவனத்தில் எச் எஸ்பிசி வங்கியில் இருந்த 100 கோடி ரிங்கிட்(243.15 மில்லியன் டாலர்) பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பணத்தை நிதியமைச்சின் சூரிய ஸ்ட்ரேடெஜிக் எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

கிழக்குக்கரையில் 600 கிலோ மீட்டர் மற்றும் சபாவில் 662 கிலோ மீட்டர் ஆகிய இரு திட்டங்கள் சீனாவின் சிபிபி குத்தகை நிறுவனத்துக்கு 2016இல் வழங்கப்பட்டன.

எனினும், அதிக செலவினான அத்திட்டம் மறுபரிசீலனை செய்யும் வகையில் முடக்கப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker