Latestஉலகம்மலேசியா

‘செடிக்’கில் நிதி முறைகேடு! -ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் அம்பலம்

கோத்தா கினபாலு, ஜூலை. 16- இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரிங்கிட் மானியம் பிரதமர் துறையின் கீழ் இருந்த சிறப்பு பிரிவினால் தவறாக நிதி நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது என்று 2018 ஆம் ஆண்டிற்கான ஆடிட்டர் ஜெனரல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் கீழ் இந்திய சமுதாய மேம்பாட்டிற்கான அமைப்பாக ‘செடிக்’கிற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மொத்தம் 203.89 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஏழை இந்திய மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தாக என்று ஆடிட்டர் ஜெனரலின் முதலாவது அறிக்கை சுட்டிக் காட்டியது.

இந்த மானியத்தை செலவு செய்வது தொடர்பில் கண்காணிக்கப்பட்தற்கான பதிவுகளோ அல்லது புள்ளி விவரங்கலோ இல்லை. அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்குவதில் எந்த அளவுகோலும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தது.

நிர்வாகத்தில் பலவீனங்கள் நிலவியுள்ளன. செடிக் நிர்வாகத்திற்கும் அதன் தலைமை இயக்குனர் மற்றும் அமைச்சர் மற்றும் பிரதமர் துறையின் துணையமைச்சர் ஆகியோருக்கு இடையே முரண்பட்ட நலன்கள் இருந்துள்ளன உள்ளன என்று அது தெரிவித்துள்ளது.

திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதற்கு தெளிவான செயலாக்க நடைமுறை அதாவது எஸ்.ஓ.பி. இல்லாததே இதற்கு காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், இதில் நடந்துள்ள முறைகேடுகளில் 2017 ஆம் ஆண்டில் தகுதியில்லாத 49 அரசு சாரா அமைப்புகளுக்கு மொத்தம் 18.96 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 20 அரசு சாரா அமைப்புகள் 23 திட்டங்களுக்காக மொத்தம் 10.77 மில்லியன் ரிங்கிட் செலவினம் குறித்து செடிக் முறையாக தாக்கல் செய்யவில்லை.

5 அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஒரு திறன் பயிற்சி கல்விக் கழகம் ஆகியவை தங்களுக்கு கூடுதலாக கிடைத்த நிதியான 2.86 மில்லியன் ரிங்கிட் திருப்பித் தரவே இல்லை. சில அரசு அமைப்புகள் தங்கள் வகுத்த திட்டங்களுக்காக பெற்ற பணத்தை செலவிட வில்லை என்று ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது

அன்றைய சுகாதார அமைச்ச, பிரதமர் துறையில் இருந்த துணை அமைச்சர் மற்றும் செடிக் அமைபு ஆகியவை 2016க்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடையில் 38 மில்லியன் ரிங்கிட் பணத்தை அரசு சாரா அமைப்புகளுக்கு கோயில்களுக்கும் ஒரே தவணையாக வழங்கி விவரங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்தம் 1.9 மில்லியன் ரிங்கிட் தொடர்புடைய 5 திட்டங்களில் பங்கேற்றதாக கூறப்படுவோரிடம் மேலோட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அப்படி ஒரு திட்டம் இருப்பதே தங்களுக்கு தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட திட்டத்தில் பங்கேற்றவர்கள் எனக் கூறப்படுவர்கள், ஒட்டுமொத்தமாக தாங்கள் அப்படிப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று கூறி உள்ளனர். அரசு சாரா அமைப்புகளின் திட்டங்களின் அமலாக்கம் ஆய்வு என்ற அடிப்படையில் செடிக்கின் கண்காணிப்பு இல்லாமல் இருந்துள்ளது எனவே இங்கெல்லாம் தில்லுமுல்லுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு செடிக் அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மறுசீரமைக்கப்பட்டு இந்திய சமுதாய உருமாற்ற சிறப்பு பிரிவாக, அதாவது மித்ரா என்ற பெயரில் புதிய அரசாங்கத்தின் பிரதமர் துறையின்கீழ் செயல்பட்டு செயல்பட்டு வருகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker