Latestசினிமா

பிக்பாஸ் வீட்டில் ஸ்ரீரெட்டியா.. இதை நம்பலாமா..! 

சென்னை,ஜூலை.16- பிக்பாஸ் மூன்றில் கலந்து கொள்வது பற்றி இணையத்தில் வெளியான தகவல் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம் அளித்துள்ளார். சர்ச்சைக்கு பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி .

கடந்த சீசனில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழில் தற்போது சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது .தெலுங்கிலும் இந்த வாரம் ஆரம்பமாக இருக்கிறது என்ற அறிவிப்பு வந்த உடனே இம்முறை ஸ்ரீ ரெட்டி பங்கேற்பார் என்று இணையதளத்தில் அவரது பெயர் பலமாக அடிபட்டது.

அதனை உறுதி செய்வது போல் ஸ்ரீ ரெட்டியும் பிக்பாஸில் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேட்டிகளில் தெரிவித்தார் .தனது பேஸ்புக் பக்கத்தில் அவரது ரசிகர்கள் எந்த பிக்பாஸில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் அவர் நிச்சயம் தமிழில் தான் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லவில்லை.இச்சூழ்நிலையில் அவர் பெயர் கொண்ட டிவிட்டர் பக்கம் ஒன்றில் நான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என ஒரு பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த டுவிட்டர் பக்கம் ஸ்ரீ ரெட்டியின் அதிகாரப்பூர்வ பக்கம் என அறிய குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் தெலுங்கு பிக்பாஸூக்கு தான் செல்கிறார் என்ற தகவல் பரவலாகி வருகிறது .

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி, அந்த தகவலை மறுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார். அதோடு தனது பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் மட்டுமே கணக்கில் இருப்பதாகவும் அவர் கூறினார் .

ஆனால் ஸ்ரீரெட்டியின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. ஏனென்றால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்க கூடாது என்று நிபந்தனை உள்ளது. எனவே இல்லை இல்லை எனச் சொல்லிக்கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker