Latestஇந்தியா

வட இந்திய மாநிலங்களில் கடும் வெள்ளம்: பலர் மரணம்

நியூடில்லி, ஜூலை 16 – வட இந்தியாவில் பருவமழை சீற்றத்தினால் கட்டடம் ஒன்று புதையுண்டதில் 14 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

வட இந்தியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக இமாலய அடிவாரத்திலிருந்து ரொஹிங்யா மக்களின் நிவாரண மையங்கள் வரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

வங்காள தேசத்தில் கடந்த வாரம் 29 பேர் பலியாயினர். அதில் 18 பேர் மின்னல் தாக்கியும் வங்காள விரிகுடாவில் படகு மூழ்கியதால் 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

மேலும் ரொஹிங்யா அகதிகள் குடியிருப்பில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள நூற்றுக் கணக்கான குடில்கள் நாசமாயின.

ஹிமாசல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். கனராக வாகனங்களைப் பயன்படுத்தி உடல்கள் மீட்கப்படுகின்றன.

அதற்கடுத்து நேப்பாலில் 67 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக மரணமடைந்த வேளையில் 30 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை ஏற்படும் பருவகால மழையினால் பெரும்பாலும் இம்மாதிரியான இழப்புகள் ஏற்படுகின்றன.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களில் வெள்ளம் சுழ்ந்து இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker