Latestஇந்தியா

இறுதிச் சடங்குக்கு பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை! 

திருப்பூர் ,ஜூலை,16- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இறுதிச் சடங்குக்கு பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்ன காளி பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் வயது 70. அவரது மனைவி ராசாத்தி . இவர்களுக்கு செல்வி மற்றும் சாந்தி என இரண்டு மகள்களும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர் .

துரைராஜ் மனைவி ராசாத்தி 20 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்விக்கு திருமணம் நடந்து ரகுநாதன் என்ற மகன் ஒருவன் இருந்தான்.

செல்வி கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மகனுடன் தந்தை வீட்டிலேயே தங்கிவிட்டார் .கடந்த ஆண்டு செல்வியின் மகன் ரகுநாதன் வீட்டிலளயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் 37 வயது ஆகியும் கோபால் கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலையும் அந்த குடும்பத்தை வாட்டியது .இதனால் குடும்பமே மனம் உடைந்து காணப்பட்டது. மனச்சோர்வுக்குப் பின் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவரது தந்தை துரைராஜ் மற்றும் சகோதரி செல்வி ஆகியோர் விஷம் குடித்தனர். இதில் துரைராஜ் உயிரிழந்தார் .செல்வி மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை செல்வியும் பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை இச்சம்பவதிற்கு முன்னர் தனது தங்கை சாந்தியை பார்க்க கோபாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் தனது சொத்து பத்திரத்தை கொடுத்துள்ளார். மேலும் 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சாந்தி கேட்டபோது இந்த பணம் கண்டிப்பாக உனக்கு தேவைப்படும் என கூறி உள்ளார். சொத்து பத்திரம் குறித்து கேட்ட போது எங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நீ வைத்துக் கொள் என கூறியுள்ளனர் .

பின்னர் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது இறுதி சடங்கிற்கு தான் பணத்தை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது என சாந்தி தற்போது கூறியுள்ளார். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker