Latestமலேசியா

அடையாளம் தெரியாத நபர்களிடம் 10,000 வெள்லியை இழந்த காஃபா ஆசிரியர் !

குவந்தான், ஜூலை. 17-  சமயப்பள்ளி (காஃபா) ஆசிரியர் ஒருவர் அறிமுகம் இல்லாத நபரிடம் தனது ஆன்லைன் வங்கி கணக்கு பரிவர்த்தனை அனுமதி எண்ணை (திஏசி) வழங்கியாதல் 10,000 வெள்ளியை இழந்துள்ளார். இச்சம்பவம் ஜெராந்துட் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

30 வயதான அந்த ஆசிரியரை புதன்கிழமை காலை நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னை உள்நாட்டு வருவாய் வாரிய (ஐஆர்பி) அதிகாரியாக அறிமுகப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் தந்தையின் பெயரில் கெடா, அலோர் ஸ்டாரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று உள்ளது . அதற்கு 17,600 வெள்ளி  வரி நிலுவை இருப்பதாக அந்நபர் கூறியுள்ளார்.

பின் கோத்தா செத்தார் மாவட்ட போலீஸ் தலைவர் என கூறிக் கொண்ட நபருக்க இந்த அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.  அந்நபர் பாதிக்கப்பட்டவரும் அவரின் தந்தையும் பணமோசடியில் ஈடுபட்டதற்காக விசாரிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பில் அந்த ஆசிரியரின் வங்கி கணக்கு கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக “திஏசி” எண் உள்ளடக்கி குறுஞ்செய்தி வந்தால் உடனே அதனை தனக்கு அனுப்ப வேண்டும் என அந்நபர் பாதிக்கப்பட்டவரை பணித்துள்ளார்.

அதன் பின் தனது வங்கி கணக்கிலிருந்து இரு முறை 10,000 வெள்ளி இரு வெவ்வேறு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி பாதிப்புற்ற நபருக்கு வந்துள்ளது.

இதனால் கலக்கம் அடைந்த அவர், வங்கி தரப்பை தொடர்பு கொண்டதால் ஒரு பண மாற்று நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளது. மேலும் தமது குறித்து போலிசில் புகார் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என பகாங் மாநில வணிக குற்ரவியல் தடுப்பு பிரிவு தலைவர் சுவப்ரிண்டண்ட் ண்ட்முகமட் வாஸிர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker