Latestஉலகம்

அறையில் உறங்கி கொண்டிருந்த சிறுவனை வெளவால் கடித்தது !

லண்டன், ஜூலை.17 –  விடியற்காலை 2 மணியளவில் குழந்தைகள் உறங்கும் தொட்டிலில் (baby cot) உறங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனை, சிறிய இன வகையைச் சேர்ந்த வௌவால் கடித்துள்ளது.

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அச்சிறுவன் திடீரென  அலறும் சத்தம் கேட்டு அவரின் தாயார் ஜோடி சிமித், அறையில் சென்று பார்த்துள்ளார். அப்போது கியான்  வயது 2, வயிற்று வலியினால்தான் அழுகிறான் என்று எண்ணி அவரின் அறைக்குக் கொண்டு சென்று உறங்க வைத்தார்; ஆனாலும் அச்சிறுவன் அழுகையை நிறுத்த வில்லை.

மறுநாள் காலையில், சிறுவன் கையில் மூன்று சிறிய கடி தழும்புகள் இருப்பதை சிமித் கவனித்துள்ளார். உடனே, மகனின் அறையில் சென்று பார்த்த போது, அந்த வௌவால் பறந்து கொண்டிருந்தது. முதலில், அது ஒரு வகை சிலந்தியாக இருக்கும் என்று நினைத்தேன் என அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த வௌவாலை பிடித்து வைத்து கியானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவனுக்கு ‘ரேபிஸ்’ நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

மேலும், அவ்வகையான உயிரினம் எவ்வாறு வீட்டுற்குள் நுழைந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை என்றும் சிமித் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வௌவால்கள் பொதுவாக மனிதர்கள் வசிக்கும் இருப்பிடத்தை தேடி போகாது. அந்த சமயத்தில், அது தவறுதலாக  வீட்டின் உள் புகுந்திருக்க கூடும் அல்லது பறக்க கற்றுக் கொண்டிருந்த போது வழி தவறி வந்திருக்கக்கூடும் என வெளவால்கள் பாதுகாப்பு அறக்கட்டளை பேச்சாளர் ஒருவர் கூறியதாக அச்செய்தியில் தகவல் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker