Latestஉலகம்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்:- கோயில்கள் இடிந்து சேதம்!

ஜகார்த்தா, ஜூலை.17- இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் கோயில்கள் இடிந்து சேதம் அடைந்தன .

புவியியல் அமைப்பின்படி பூமியின் நெருப்புக் கோளம் என்ற ழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் பாலி, கிழக்கு ஜாவா லோம்போக் ஆகிய தீவு பகுதிகளில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .ரிக்டர் அளவுகோலில் 5.7புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 91 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர் .பின்னர் அவர்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக பாலில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ அல்லது யாரும் காயமடையவில்லை. முன்னதாக இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும் இதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker