Latestஉலகம்

இரண்டு தலைகள், மூன்று கண்கள், இரண்டு வாய்கள் – அதிசய கன்று !

சாண்டியாகோ டெல் எஸ்டெரோ ஜூலை, 17 – அர்ஜென்டீனாவில், இரண்டு தலைகள், மூன்று கண்கள் மற்றும் இரண்டு வாய்களுடன் பிறந்த கன்றுக்குட்டியின் வீடியோ, பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அக்கன்றுக்குட்டியின்  ஒட்டிய இரண்டு தலைகளையும் ஒரு விவசாயி பிடித்துக் கொண்டிருப்பதை அப்பதிவில் காண முடிகிறது.

அக்கன்றுக்குட்டிக்குச் இரண்டு தலைகள், மூன்று கண்கள் மற்றும் இரண்டு வாய்கள் இருந்ததாலும் அதற்கு எப்போதும் போல இரண்டு காதுகள் இருக்கின்றன.

வடக்கு அர்ஜென்டினாவின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோவின் குய்மிலி மற்றும் அனதுயா ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாசலோ கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.

அக்கன்றைக் கண்ட விவசாயி ஆச்சரியப்பட்ட வேளை பிறந்த பிறகும் இக்கன்று  உயிருடன் இருக்கிறதா என்று தமக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை என்று உள்ளூர் ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், வீடியோவைப் பார்த்த ஒரு நெட்டிசன், இதுபோன்ற தோற்றம் பொதுவாக கன்றின் குறைபாட்டினால் ஏற்படக் கூடும் என்றார். மேலும், இது ஒரு சியாமி வகை இரட்டை கன்று என்றும் கூறினார்.

இந்த குறைபாடு பூச்சிக்கொல்லிகளால் ஏற்படுகிறது என்று மற்றொரு நெட்டிசனால் கருத்து கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker