Latestமலேசியா

எரிவாயு வெடித்ததில் பெண்மணி காயம் – வீட்டின் உட்புறம் சேதம்

பாசீர் கூடாங் ஜூலை 17 –  சமையல் எரிவாயு வெடித்ததில் வீட்டின் உள்பகுதி சேதமைடந்த வேளையில் , பெண்மணி ஒருவரும் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று காலை 7.36 மணியளவில் இங்குள்ள தாமான் கோத்தா மாசாய் ஜாலான் புலாசன், 21 எனும் பகுதியில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து பாசீர் கூடாங் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதும் அவர்கள் இவ்விடத்திற்கு உடனே விரைந்துள்ளனர். ஆனால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை முன்னதாகவே அண்டை வீட்டுக்காரர்கள் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டனர். அவரை அடையாளம் காண முடியவில்லை என இச்சம்பவத்தின் தீயணைப்பு படைசெயல்திட்ட அதிகாரி, ரஸாலி ஹுசின் தெரிவித்தார்.

காலை 8.55 மணியளவில் தங்களின் நடவடிக்கை நிறைபெற்றதாகவும்  இச்சம்பவத்தின்  இழப்புகள் கணக்கீடு இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker