Latestஉலகம்

கண்ணுக்குள் பூச்சி – ஆடவர் அதிர்ச்சி !

கெந்தாக்கி, ஜூலை 17 – காட்டில் மரம் வெட்ட சென்ற நபரின் கண்ணில் பூச்சி புகுந்து அவருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் கிறிஸ்  ப்ராடெர் எனும் மின் தொழிலாளி மரங்களை வெட்ட சென்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது கண்களில் ஒரு வித எரிச்சல்  ஏற்படுவதை அவர் உணர்ந்துள்ளார்.

தூசியால் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக  எண்ணி அவர் கண்களை நீரில் கழுவியுள்ளார். ஆனால் கழுவிய பின் கண்களில் நெருடலும் எரிச்சலும் அதிகமாகியுள்ளது. வலி தாங்க முடியாத கிறிஸ் , கண் மருத்துவரை அணுகியுள்ளார்.

மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கண்ணில் மிக சிறிய “திக்” வகை பூச்சி இருப்பது தெரிய வந்துள்ளது. முதலில் இதனை அந்த ஆடவர் நம்பவில்லை. ஆனால் பின் மருத்துவர் விளக்கியதும் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரத்யேக கருவியை கொண்டு மருத்துவர் அந்த பூச்சியை கண்களிலிருந்து அகற்றிய பின்னர் அந்த ஆடவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker