Latestஉலகம்

காணாமல் போன ஹாலிவுட் நடிகர் பிணமாக மீட்பு !

நியூயார்க்,ஜூலை,17-சில நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70) இவர் எவ்ரிபடி ரைட்ஸ்ஆப் காரவ்சல், அன்னி ஹால்,பிட்வின் லைன்ஸ், தி மென் வித் ரெட் ஷூ,த கோல்ட் சைல்ட்,சிவில் ஆக்‌ஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சார்லஸ் லெவின் கடந்த 8 ஆம தேதி திடீரென மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர் .அவருடைய மகன் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனாலும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை .

இந்நிலையில் சார்லஸின் கார் ஒரேகானில் உள்ள செல்மா என்ற இடத்தில் சாலையோரத்தில் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திறந்து பார்த்தபோது காரில் அவரது நாய் இறந்து கிடந்தது .கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு பிணம் கிடப்பதையும் கண்டு பிடித்தனர்.

உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது சார்லஸ் லெனின் உடல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடக்கிறது. சார்லஸ் லெவின் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker