Latestமலேசியா

கிளாந்தான் சுல்தான் தம்பதியினர் விவாகரத்து ?

கோலாலம்பூர், ஜூலை.17- கிளாந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகமட் V (வயது 50) தனது மனைவி ரிஹானா ஒக்சானாவை (வயது 26) விவாகரத்து செய்தார் என்ற செய்தி தற்பொழுது வெளிவந்துள்ளது.

நாட்டின் 15ஆவது பேரரசராக முடி சூடிய சுல்தான் முகமட் V  ரஸ்யாவைச் சேர்ந்த ரிஹானாவை கடந்த வருடம் ஜூன் 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அவ்விருவரின் திருமணம் குறித்து இஸ்தானா நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் திருமண புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து  கடந்த ஜனவரி மாதம் அவரும் தமது மாமன்னர் பதவியை துறந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தம்பதியினர் சிங்கப்பூர் ஷரியா நீதிமன்றத்தில் விவாகரத்து ஆவணங்களை சமர்பித்துள்ளனர். இதனையடுத்து அவ்விருவருக்கும் கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று விவாகரத்து வழங்கப்பட்டதாக தகவல் வெளி வந்துள்ளது.

மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கிளந்தான் பெர்மைசுரி, ராஜா பெம்புவான் கிளாந்தான், சுல்தானா கிளாந்தான் அல்லது கிளாந்தானின் ராணியார் என யாரையும் அழைக்கக் கூடாது என நேற்று மாநில அரண்மனை தரப்பும் உத்திரவு பிரப்பித்துள்ளது.

முன்னதாக ரிஹானாவின் ‘இன்ஸ்தாகிராம்’ சமூக வலை தள பக்கத்தில், எனது மகன் ஒரு நாள் மாநிலத்தின் இளவரசாரக முடி சூட்டப்பட்டு பின் மலேசியாவின் அரசனாக பொறுப்பேற்பான் என தாம் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த பதிவேற்றம் கிளாந்தான் அரச குடும்பத்தில் கலக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த விவகாரத்து குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. கிளாந்தான் அரண்மனை தரப்பும் அமைதி காக்கின்றது.

  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker