Latestமலேசியா

கிளந்தான் சுல்தான் விவாகரத்து ; அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை !

கோத்தா பாரு, ஜூலை.17-   கிளாந்தான் மாநில ஆட்சியாளர் சுல்தான் முகமட் V தனது ரஷ்ய மனைவி ரிஹானா ஒக்சானாவை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில அரண்மனை தரப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வந்தால் மட்டுமே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் பெறாததல் எங்களால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாது. நாளிதழ்களிலும் சமூக வலை தளங்களிலும் செய்திகள் வெளிவந்த பின்புதான்  நாங்களும் இந்த விவகாரம் குறித்து கேள்வியுற்றோம்.

இது ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறியாமல் தேவைற்ற தகவல்களை பரப்ப கூடாது என அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker