Latestஇந்தியா

குஜராத்தில்  குமரிப் பெண்கள் கைப்பேசி பயன்படுத்த தடை!

ஆமதாபாத்,,ஜூலை.17- உலகம் முழுவதும் மொபைல் போன் ஆக்கிரமிப்பில் இருந்து வரும் நிலையில் இன்றைய நாளில் கைப்பேசி இல்லாத நபரே இல்லை என்று கூறலாம்.
ஆனால் குஜராத்தில் 12 கிராமங்களில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி காங்., எம்எல்ஏ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளார்

கைப்பேசிகளால் பலவித நன்மைகள் இருந்தாலும் அதே அளவில் பிரச்சினைகள் இருப்பதாகவும் குறிப்பாக பெண்களுக்கு பல தொந்தரவுகள் கைபேசிகளால் ஏற்படுவதாகும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .

மேலும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை கைபேசி மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் தற்போது கைப்பேசிகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் குஜராத்தில் உள்ள தாக்கூர் சமூகத்தில் உள்ள குமரிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர் பிறப்பித்துள்ளனர்.

இந்த சமூகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்த போது குமரிப் பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது.  அதை கலப்பு திருமணம் செய்தால் பெண்ணின் பெற்றோருக்கு ரூபாய் 1 லட்சம் அல்லது 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker