Latestமலேசியா

குறிப்பிட நேரத்திற்குள் நீர் வியோக தடை நிறைவு பெற வேண்டும் ! – ஸ்பான் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை.17- அடுத்த வெள்ளிக்கிழமை (ஜூலை 29) இரவு 9 மணிக்குள் குறிப்பிட்ட இடங்களில் நீர் விநியோகம் சரி செய்யப்பட வேண்டுமென சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனத்திற்கு (ஷபாஸ்) தேசிய நீர் மேளான்மை ஆணையம் (ஸ்பான்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சீரமைக்கும் பணிகள் மேர்கொள்ளவிருப்பதாக ஜூலை 23 முதல் இரண்டிலிருந்து நான்கு நாள்களுக்கு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இந்த தடைக்கான காரணத்தை தேசிய நீர் மேளான்மை ஆணையம் உணர்ந்துள்ளது. சுங்கை சிலாங்கூர் பகுதி 1 நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க அவர்கள் ஜூலை 2ஆம் தேதியன்று ஆணையத்திடம் விண்ணப்பித்தததை அடுத்து ஜுலை 12ஆம் தேதியன்று அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அண்மைய காலமாக இது போல் பல முறை நிர் விநியோக தடை ஏற்படுவதையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே இம்முறை வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அவர்கள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும்.

நிர் விநியோக தடை ஏற்படவுள்ள இடங்களில் ஜூலை 26ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்குள் மீண்டும் நீர் வர வேண்டும். இல்லையேல் சிலாங்கூர் நீர் நிறுவனத்தின் நிர்வாத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மாற்ற கோரி சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என ஆணயத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker