Latestசினிமா

சம்பள விஷயத்தில் உலக நாயகனை பின்னுக்குத் தள்ளிய நயன்தாரா!

சென்னை,ஜூலை.17- கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா .இவரின் பெயருக்கு ஏற்றார் போல் தொடர்ந்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைக்கிறது.

இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நயன்தாராவை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

அதேபோல் நயன்தாரா தற்போது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது கோலிவுட் நடிகைகள் பெரும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்களின் 100 பட்டியலை வெளியிட்டு வருகிறது .

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டின் பட்டியல் தற்போது வெளி வந்துள்ளது. இந்த பட்டியலில் நயன்தாரா 69 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு இந்த ஆண்டு 15 – 17 கோடி ரூபாய் வருமானம் அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் சல்மான்கான், விராத் கோஹ்லி, அக்சய்குமார், தீபிகா படுகோன் என்று மற்றும் தோனி ஆகியோர் உள்ளனர்.

மேலும் இந்த பட்டியில் ஏ ஆர் ரகுமான் 11-வது இடத்திலும் ரஜினிகாந்த் 14ஆவது படத்திலும் விஜய் 26 ஆவது இடத்திலும் விக்ரம் 29வது இடத்திலும் சூர்யா 34 வது இடத்திலும் தனுஷ் 53 இடத்திலும் கமல்ஹாசன் 71ஆவது இடத்திலும் உள்ளார் .

இதன்படி பார்த்தால் சம்பள விஷயத்தில் கோலிவுட் நடிகைகள் யாரும் இடம்பெறவில்லை அதேபோல் 69 ஆவது இடத்தை பிடித்து உலக நாயகன் கமல்ஹாசன் பின்னுக்குத் தள்ளி உள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker