Latestஇந்தியா

சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்.எல்.ஏ சஸ்பெண்ட்! 

டேராடூன்,ஜூலை.17- உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சினிமா பாணியில் நடனமாடுவதை தொடர்ந்து அவரை கட்சி தலைமை ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.


உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதாப் சிங் சாம்பியன். இவர் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ. அவர் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர் போன நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நண்பர்களுடன் குடித்து விட்டு ஆடியுள்ளார் .

ஒரு கட்டத்துக்கு மேல் வாயில் துப்பாக்கியினை வைத்துக்கொண்டு பயங்கர ஆட்டம் போட்டுள்ளார் .மேலும் தகாத வார்த்தைகளால் நண்பர்களை திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து பிரணாவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் கட்சி தலைமை தெரிவித்தது. இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்தது .இந்நிலையில் துப்பாக்கி ஏந்தியபடி சினிமா பாணியில் நடனமாடிய பாஜக எம் எல் ஏ 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்ய இன்று உத்தரவிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker