Latestமலேசியா

திஎம்ஜே தம்பதியினருக்கு 3ஆவது குழந்தை !

ஜொகூர், ஜூலை. 17-  ஜொகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயில் (திஎம்ஜே) – சே புவான் கலீடா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை (ஆண்) பிறந்துள்ளது. இத்தகவல் அவரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில்  இன்று பகிரப்பட்டுள்ளது.

அப்பதிவில், எங்களுக்கு இளரசன் பிறந்துள்ளான் என திஎம்ஜே குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை மக்கள் பலரும் தங்களின் சமூக வலைத் தல பக்கத்தில் பகிர்ந்து இளவரசர் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் 2015ஆண்டில் தம்பதியனருக்கு பெண் குழந்தை (துங்கு கல்சோம் அமீனா) பிறந்தது. அவரை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஆண் குழந்தை ( துங்கு இஸ்கண்டார் அப்துல் ஜாலில்)  பிறந்தது.

அந்த ஆண் குழந்தையை ஜொகூர் மாநில “ராஜ மூடா”வாக சுல்தான் இப்ராஹிம் தமது 60ஆவது பிறந்தநாளில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker