Latestமலேசியா

தெர்மா மீட்டர் உடைந்து மெர்குரி இரசாயனம் கசிவு; பள்ளியில் பரபரப்பு !

கோலா சிலாங்கூர், ஜூலை 17- பள்ளி வகுப்பில் அறிவியல் சோதனை மேற்கொள்ளும் வேளையில்  ‘மெர்குரி’ இரசாயனம் கசிந்ததினால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம்  நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கோலா சிலாங்கூரில் உள்ள காய் தீ சீனப்பள்ளியில் நிகழ்ந்துள்ளது.  வகுப்பில் அறிவியல் ஆராய்ச்சி பாடம் போதிக்கப்பட்ட வேளையில்  தெர்மா மீட்டர் ஒன்று  தவறி கீழ் விழுந்து உடைந்தது.  அதனால் அதிலிருந்த  மெர்குரி இரசாயனம் கசிந்தது.

பின் இச்சம்பவம் குறித்து பிற்பகல் 12.56 மணியளவில் கோலா சிலாங்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த 8 தீயணைப்பு வீரர்கள், கசிந்திருந்த மெர்குரியை சிறப்பு கருவியைக் கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.

இந்த  நடவடிக்கை சுமார் 2 நிமிடத்தில் செய்து முடிக்கப்பட்டது என கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை தலைவர் முகமட் ஃபைசால் ஜுமாரி தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவ நேரத்தில் வகுப்பில் இருந்த  ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker