Latestமலேசியா

நைஜீரிய மாணவர் இறப்பு; உடலில் காயம் எதுவும் இல்லை

கோலாலம்பூர், ஜூலை 17 – தடுப்புக் காவலில் இறந்த நைஜீரிய மாணவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை என மருத்துவமனை அறிவித்தது.

புக்கிட் ஜாலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நைஜீரியரான ஓர்ஹியோன்ஸ் இவான்சிஹா தோமஸ் ஜூலை 9 இல் இறந்துள்ளார். பிரேத பரிசோனையில், உடலில் எந்த விதமான காயமும் இல்லையென சேன்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

உடலில் துல்லியமாக பரிசோதனை செய்யப்பட்டதில் காயம் எதுவும் காணப்படவில்லை என மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், மற்ற சோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர், மருத்துவ அறிக்கை வெளியிடப்படும்.

தடுப்புக் காவலில் இருந்த தோமஸ், நினைவு இழந்து வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அன்று இரவு 12.08க்குச் செய்தி கிடைத்தவுடன்
மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

தோமஸ் இறந்து விட்ட நிலையில் இருந்ததால், காலை 5 மணிக்கு உடல் பிரேத பரிசோனைக்கு அனுப்பப்பட்டது. தோமஸ்(வயது 33) ஜூலை 9 மணியளவில் வலிப்பு நோயின் காரணமாக இறந்து விட்டதாக குடிநுழைவுத் தலைமை இயக்குநர் கைருல் ட்சைமி டாவுட் தெரிவித்தார்.

லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தில் முனைவர் கல்வி பயின்று  கொண்டிருந்த தோமஸுக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

தடுப்புக்காவலில் இருந்த தோமஸ் இரவு 12.30க்கு இறந்ததாகவும், அதனை அறிந்து புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker