Latestஉலகம்

பட்டாசு வாயில் புகுந்து வெடித்தது ; மாது மரணம்

மட்ரிட்,ஜூலை 17-  வாயில் பட்டாசு புகுந்து வெடித்ததில் 56 வயது மாது ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார். இச்சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

விசோ டெல் மார்க்ஸ் நகரில் நடைப்பெற்ற மத விழாவில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அப்பொழுது வெடிக்கப்பட்ட “ராக்கேட்” வகை பட்டாசு ஒன்று பறந்து அந்நிகழ்ச்சியை காண வந்த மாது ஒருவரின் வாயினுள் புகுந்து வெடித்தது. இதனால் அவர் படுகாயமுற்று மரணமடைந்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த மருத்துவ சிகிச்சை பிரிவினரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இது தொடர்பில் அந்த பட்டாசை கொளுத்திய நபர், மரணம் விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இறந்த அந்த மாது பெரும்பாலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என கூறப்படுகின்றது.

இதனால் அந்த மத விழாவும் நிறுத்தப்பட்டது. மேலும் மாதின் மரணத்தை முன்னிட்டு இரு நாட்களுக்கு அந்த நகரத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker