Latestஉலகம்

பயண ஆவணமின்றி விமானத்தில் பயணிக்க முயன்ற 12 வயது சிறுவன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜூலை 17 – ஹீத்ரோ விமான நிலையத்தின்  பாதுகாப்பு கட்டுப்பாட்டிலிருந்து தந்திரமாக தப்பித்து, லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏறிய 12 வயது சிறுவனை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

தன்னந்தனியே வந்த அந்த சிறுவன் விமானத்திற்குள் நுழைந்த பின்னரே, அங்கிருந்த கேபின் குழுவினர்  ஒருவரின் கண்ணில் அகப்பட்டுள்ளான். அவர் நுழைவாய் சீட்டை கேட்கையில் அதற்கு அவன் முறையாக பதிலளிக்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராததால் அவன் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

பின்னர் விசாரணையில், அந்தச் சிறுவன் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவன் எனவும், அவனிடம் எவ்வித தகுந்த ஆவணங்களும்  இல்லை எனவும் தெரிவந்தது. மேலும் அவன் ஒரு வழிமாற்று பயணியாக கூட இருக்கலாம் என்றனர்.

அச்சம்பவத்திற்கு பிறகு, அந்த விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ,உரிய ஆவணங்களுக்கான மறுசோதனை நடத்தப்பட்டதால் அவ்விமானம் புறப்படுவதற்கு காலதாமதமானது.
சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், ” அந்த சிறுவனிடம் எந்தவொரு உரிய ஆவணங்களும் இல்லை; பெரியவர்களின் துணையுடனும் அவன் அங்கு வரவில்லை”, என்றார்.
விமானம் காலதாமதமானதற்காக  பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்;  பயணிகள் மற்றும் கேபின் ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமானது. அதனால்தான் கூடுதல் பரிசோதனைகளையும்  போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் செய்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker