Latestஉலகம்

பாக்கிஸ்தான் “சியாம் இரட்டையர்களுக்கு” 55 மணி நேர அறுவை சிகிச்சை

லண்டன், ஜூலை.17- தலை ஒட்டி பிறந்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த “சியாம் இரட்டையர்” சகோதரிகள் சுமார் 55 மணி நேர அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனிலுள்ள கிரேட் ஸ்ட்ரீட் சிறார் மருத்துவமனையில் (கோஷ்) நடந்த அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட 4 மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் மண்டை ஓடுகளையும் இரத்த நாளங்களையும் பகிர்ந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் தலையை பிரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதனையடுத்து 9 மாத சிகிச்சைக்கு பின் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதியன்று அவ்விரு இரட்டையர்களும் முழுமையாக குணமடைந்ததை உறுதி செய்த பின் மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டது.

“சஃபாவும் மார்வாவும் அவர்களுடைய நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கோஷ் மருத்துவமனை நேற்று முன்தினம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

சஃபாவும் மார்வாவும ஜனவரி 2017 ஆண்டு பிறந்த இரட்டை குழந்தைகளாவர்  என்றும் பிறவியிலேயே அவர்களின் தலை ஒட்டிருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த இரட்டையர்களும் கடந்த ஆண்டு முதல் அறுவை சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

4 நிலைகளை உள்ளடக்கிய இந்த அறுவை சிகிச்சையில் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் முதல் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கிரானியோஃபேஷியல் நிபுணர்கள் போன்று 100 மருத்துவ ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker