Latestமலேசியா

பாலியல் ஆபாச வீடியோ; மேலும் மூவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 17 – பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட பாலியல் ஆபாச வீடியோ சம்பந்தமாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அந்த உள்ளூர்க்காரர்கள் மூவரும் 29லிருந்து 37 வயதுடையவர்கள் என்றும் ஜோகூர் பாரு வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சில கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படும். இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 292இன் கீழும் தகவல், பல்லூடகச் சட்டத்தின் மூலமும் விசாரணை செய்யப்படுவர் என புக்கிட் அமான் புலனாய்வுத் தலைவர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker