Latestமலேசியா

பாலியல் வீடியோ உண்மையானால் – அஸ்மின் பதவியிலிருந்து விலக வேண்டும்- அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 17 – பாலியல் வீடியோவில் முகமட் அஸ்மின் அலி உண்மையிலேயே சம்பந்தப்பட்டிருந்தால் அவர் தாமாக அமைச்சரவைப் பதவியை விட்டு விலக வேண்டுமென பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

எனினும், அந்தப் பாலியல் வீடியோவில் சம்பந்தப்பட்ட இருவரின் அடையாளம் இன்னும் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதுவரை வெறும் வதந்தியாகத்தான் அதனைக் கேட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

முதலில் அஸ்மின் பதவி விலகத் தேவையில்லை என தாம் கூறி வந்ததாகவும் ஆனால், தற்போது ஏற்பட்ட வழக்கின் மேம்பாட்டின் வழி, தாம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அஸ்மின் விடுப்பில் செல்வது அவரின் முடிவைப் பொருத்தாகும் என துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வீடியோ சம்பந்தமாக இது வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சம்பந்தப்பட்டுள்ள சந்துபோங் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் ஹாஸீக் அஸிஸ் அந்த வீடியோவில் இருப்பது தாம்தான் என்றும் மற்றொருவர் அமைச்சர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker