Latestஉலகம்

பிரேக் செயலிழந்து பள்ளத்தில் விழுந்த பேருந்து; 13 பேர் மரணம் !

தேரான், ஜூலை.17-   ஈரானில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் மாண்டனர். இச்சம்பவம் புயின் வா மியாண்டாஷ் – கன்சார் நகரம் செல்லும் வழியில் நிகழ்ந்தது.

அப்பேருந்து பயணிகளுடன் அங்குள்ள இஸ்ஃபாஹான் மலை பகுதியிலிருந்து கீழ் இறங்கி கொண்டிருந்த போது, அதன் பிரேக் செயலிழந்ததால் பள்ளத்தில் விழுந்தது என கன்சார் நகர ஆளுநர் மன்சூர் கமாலி தெரிவித்தார்.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 13 பேர் மரணமடைந்த வேலையில்  9 பேர் காயமடைந்துள்ளனர் . ஈரானில் சாலை நிலை நன்றாக இருந்தாலும், உலகில் அதிகமான சாலை விபத்துக்கள் அந்நாட்டில்தான் நிகழ்கின்றன.

பொருளாதார கட்டுப்பாடுகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியம் செய்யும் வாகன ஓட்டுனர்களின் மெத்தன  போக்கின் காரணமாக அங்கு அதிகளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன எனக் கூறப்படுகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker