Latestஉலகம்

பிளாஸ்டிக் பைகளை தடுக்க வினோத அணுகுமுறை !

வான்கூவர், ஜுலை.17-  பிளாஸ்டிக் பைகள் பூமியை மாசுபடுத்தினாலும், இன்னமும் பல வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைகளைதான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். கடைகளில் பொருள் வாங்கும் பொழுது அவர்கள் பல காரணங்களை முன் வைத்து இந்த பிளாஸ்டிக் பைகளை கோரி செல்கின்றனர்.

ஆனால் கனடாவில் உள்ள ஈஸ்ட் வேஸ்ட் சந்தையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பை கோராமல் இருக்க வேண்டி புதிய யுக்தி கையாளப்படுகின்றது.

இச்சந்தையில் சுமார் 1,000 பிளாஸ்டிக் பைகளில் ஆபாசப்பட முத்திரை மற்றும் இழிவு படுத்தும் வகையிலான சுலோகன்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இங்கு வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பை கோரினால், அவர்களிடம் இந்த பைகள்தான் வழங்கப்படும் என அச்சந்தையின் உரிமையாளர் டேவிட் லீ க்வேன் தெரிவித்தார்.

இந்த மாற்று அணுகுமுறையை கையாளுவதன் வழி வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைகள் கோறுவதை தடுக்க முடியும்.

“பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீர்கள்” என்று பல்வேறு வழிகளில் வாடிக்கையாளர்களுக்கு நினைவுறுத்தினாலும், அந்த நினைவுறுத்தலை பின்பற்றவோ அல்லது ஏற்று கொள்ளவோ அவர்கள் மறுக்கின்ற காரணத்தினால்தான்  இப்படி ஒரு வேடிக்கையான முறையை கையாள வேண்டியுள்ளது.

இந்த அணுகுமுறை வேடிக்கையாக இருந்தாலும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை  சிந்திக்க வைக்கவும் விரும்புகிறோம். இந்த அணுகுமுறையால் பல வாடிக்கையாளர்கள் மனம் மாறியுள்ளதை உணர முடிகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker