Latest

புற்றுநோயினால் பாதிப்புற்ற மாணவிக்கு ஆதரவு நல்க மொட்டை அடித்த விரைவுரையாளர் !

கோத்தா கினபாலு, ஜூலை.17- புற்றுநோயினால் பாதிப்புற்ற தனது மாணவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அம்மாணவியைப் போலவே  தலை முடியை மொட்டையடித்துள்ள சம்பவம் மக்களின் மனதை வறுடியுள்ளது.

அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ரிச்சல் ஹீ ஹூவா யின் (வயது 20) எனும் மாணவிக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது கடந்த பிப்ரவரி மாதத்தில் கண்டிப்பிடிக்கப்பட்டது. அந்நோய தற்பொழுது மூன்றாம் நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகம் – கணக்கியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் பத்மினி கேபிடி பாலகிருஷ்ணன் தமது தலை முடியையை மொட்டையடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த மாணவிக்கு முழங்கால் பகுதியில் எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் மார்ச் மாத தொடக்கத்தில் முதல் கீமோதெரபி சிகிச்சைக்கு பின், புற்றுநோய் செல்கள் நுரையீரலுக்கு பரவியிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

நேற்று (ஜூலை 16) அவர் 8ஆவது முறையாக கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார், அவர் முன்னேற்றம் கண்டு குணமடைவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.  அவருக்கு ஆதரவு நல்க பல வழிகள் உண்டு . அதில் ஒன்றாக நான் அவர் போலவே மொட்டையடிக்க எண்ணம் கொண்டேன்.

மக்கள் மத்தியில் ஈர்ப்பினை ஈர்க்க நான் இந்த செயலை செய்யவில்லை. அம்மாணவிக்கு தைரியம் வழங்கவே செய்தேன் என டாக்டர் பத்மினி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker