Latestமலேசியா

மலேசியர்களின் உணவு: சத்துணவு குறைந்தது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17 – மலேசியர்களுக்கு சத்துள்ள உணவை சாப்பிட வேண்டுமென்பதைத் தெரிந்திருந்தாலும், எம்மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டுமென தெரியாதவர்கள் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியர்கள் தங்களின் உணவில் நார்சத்து நிறைந்த பழங்கள், பால், காய்கறிகளைக் குறைவாக எடுத்துக் கொள்வதோடு சர்க்கரை மிகுந்த உணவுகளை விரும்பி உண்ணுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்சிய சத்து, இரும்புச் சத்து ஆகியவை மலேசியர்களிடம் குறைவாக இருப்பதும் காணப்படுகிறது.

மேலும், உணவில் வைட்டமின் சி சத்துக்கள் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு தேவைப்படுவதை உணர்ந்திருந்தாலும் மலேசியர்கள் அதனை விட்டு விடுகின்றனர்.

சத்துக்களும் வைட்டமின் ஊட்டச் சத்தும் குறைந்தால் தொற்றா நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

நாட்டு உணவுகளான உலாம், உள்ளூர் உணவு வகைகள் யாவும் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதால் நோயைத் தவிர்க முடியும் என பேராசிரியர் பட்சிலா அடிபா அப்துல் மஜிட் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker