Latestசினிமா

வனிதா வெளியேற முக்கிய காரணம் இதுதான் !

சென்னை,ஜூலை.17- பிக்பாஸ் 3 தமிழ்  நிகழ்ச்சியில் இருந்தே வனிதா வெளியேற்றப்பட்டதற்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு என்று கூறப்பட்டுள்ளது .இது பற்றி சட்ட நிபுணர்களும் இப்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதாவது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு நபரை அதிக நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடியாது என வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இதனை உறுதி செய்வது போல் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற நாளிலிருந்து மூன்று வார காலத்துக்குள் அங்கே ஒரு முறை மகளை கடத்திய விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றது .

அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று போலீசார் விசாரணை நடத்தினர் .இது அந்த நிகழ்ச்சிக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய சாராம்சமே போட்டியாளர்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இதனால் அடிக்கடி போலீசார் விசாரணை என வந்தால் நிகழ்ச்சியின் தன்மை கெட்டு விடும் .எனவே அந்த வழக்குகள் உள்ள ஒரு நபரை போட்டியாளராக நீண்ட நாட்களாக அந்த வீட்டுக்குள் வைத்திருக்க பிக்பாஸ் விரும்பவில்லை.

வனிதாவால் டிஆர்பி எகிறி வந்த நிலையில் வெளியேற்றப்பட்டதால் பல கேள்விகளை எழ தான் செய்கிறது. ஆனால் அதற்காக சரியான விடை வனிதாவுக்கும் பிக்பாஸ்க்கும் தான் தெரியும் .எப்படியும் ஓரிரு நாளில் மீடியாக்களிடம் வனிதா வாய் திறப்பார். அப்போது அந்த ரகசியம் வெளிவந்தே தீரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker