Latestமலேசியா

வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானம் ; இன்றுடன் 5 ஆண்டுகள் !

கோலாலம்பூர், ஜூலை.17-  மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டு இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

அன்றைய தினம் இந்த போயிங் 777 ரக விமானம் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்டது. அவ்விமானத்தில் மொத்தமாக 283 பயணிகளும் 15 பணியாளர்களும் பயணம் மேற்கொண்டனர்.

அவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டையும், 44 பேர் மலேசியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதர மக்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.  மலேசிய தமிழ் திரைப்பட நடிகை சுபா ஜெய்யும் இந்த பயணத்தில் இருந்தார்.

இந்நிலையில் உக்ரெய்ன் – ரஷ்யா நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூர தொலைவில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

இப்பகுதியில் ரஷ்ய – சார்பு கிளர்ச்சிக்காரர்களுக்கும் அரசு படையினருக்கும் போர் நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 10,000 மீட்டர் உயர வன்வெளியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம்,  ஏவுகனை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரெய்னின்  உள்துறை அமைச்சு தெரிவித்தது. 

இந்த தாக்குதலை எதிர் தரப்பினர் தான் மேற்கொண்டனர் என இரு தரப்பும் கூறிக் கொண்டன. குறிப்பாக விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்ட தொலைப்பேசி உரையாடலை தமது புலனாய்வு அதிகாரிகள் ஒட்டுக் கேட்டதாக உக்ரெய்ன் அரசு தெரிவித்தது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தெதி அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிக மோசமான விமானம் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இந்த  சம்பவம் தொடர்பில் மலேசிய அரசு விசாரணை கோரல் முன் வைத்தது. ஆனால் இதுநாள் வரை இந்த தக்குதல் சம்பவத்திற்கு காரணமான தரப்பை உறுதியாக அடையாலம் காண முடியவில்லை.

இந்த சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் நிகழ்ந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதில் இறந்தவர்களுக்கு மக்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பிரதமர் துன் மகாதீரும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் நமக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இதற்கு காரணமானவர்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக போக்குவரத்து அமைச்சும் தமது இரங்கலை பதிவு செய்து இவ்விவாகாரத்திற்கு முடிவு கிடைக்கும் வரை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker