Latestஇந்தியா

வினோத நோயால் தவித்த சிறுவன்:- உதவிக்கரம் நீட்டிய ராகவேந்திரா லாரன்ஸ் 

சென்னை,ஜூலை.17- தன்னை சந்திக்க வீட்டு முகவரி தெரியாமல் தவித்த ஒரு குடும்பத்திற்கு இயக்குனரும் நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் மருத்துவ உதவி வழங்கினார். ராஜபாளையத்தை சேர்ந்த குருலட்சுமி. இவரது மகன் சூர்யா . வினோதமான நோய் தாக்குதலுக்கு ஆளான குரு சூர்யா படுத்த படுக்கையாகி விட்டதால் இந்நிலையில் குருலெட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார் .

குடும்பச்சுமையை தம்பி வெங்கடேசன் தனது அக்கா மற்றும் அக்காவின் மகனுக்காக தியாகம் செய்து அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார். வறுமையினால் அவர்களால் சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் சந்தித்தால் மருத்துவ உதவி கிடைக்கும் என்று சிலர் சொல்வதைக் கேட்டு மூன்று பேரும் சென்னை புறப்பட்டு வந்துள்ளனர். அவர்களால் ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் எதுவும் புரியாமல் தவித்த 3 பேரும் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சில தினங்களாக தங்கியிருந்தனர். இதுபற்றி தகவல் நேற்று இணையதளத்தில் படத்துடன் வெளியானதை பார்த்து ராகவேந்திரா உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

தனது சொந்த வேலைகளில் மும்முரமாக இருந்த ராகவேந்திரா இன்று காலையில் முதல் வேலையாக தனது உதவியாளரை அனுப்பி எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அவர்களை காரில் அழைத்து வர உதவினார்.

குருலட்சுமி அதைக் கேட்டதும் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார். பின்னர் மூன்று பேரையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராகவேந்திரா வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .சம்பவம் குறித்து கூறிய ராகவேந்திரா லாரன்ஸ் ,ஒரு நம்பிக்கையோடு என்னை தேடி வந்த அவர்களுக்கு எனது அறக்கட்டளை மூலமாக தேவையான மருத்துவ உதவிகள் செய்வேன். தேவைப்பட்டால் அரசின் உதவியும் நாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker