Latestமலேசியா

14 ஆவது மாடியிலிருந்து விழுந்த ஆடவர் மரணம்!

பெட்டாலிங் ஜெயா , ஜூலை 17 – இங்குள்ள மேடான் சஹாயா அடுக்குமாடி குடியிருப்பில் ‘இ’ புளோக் கட்டடத்தின் 14ஆவது மாடியிலிருந்து  விழுந்த ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார். இச்சம்பவம் இன்று நண்பகல் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் காவல் துறையினர் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு கீழே விழுந்த அவரின் உடல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் சிக்கியிருந்தது.

32 வயதான அவருக்கு நிகழ்ந்தது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் முகமட் ஸனி சே டின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker