Latestஉலகம்

4 தலைமுறையைக் கண்ட காதல் ஜோடி: ஒரே நாளில் உயிர்நீத்த துயரம்

கொலம்பஸ், ஜூலை.17 – தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் முடிந்து இரண்டே நாள்களிலே தம்பதியரின்  வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது.

அந்த வகையில் 72 ஆண்டு கால  வாழ்க்கையை வாழ்ந்து நான்கு தலைமுறைகளை வளர்த்து சீராட்டி, ஒரே நாளில் உயிர்நீத்த தம்பதியரின்  வாழ்க்கைக் கதையைப் படிப்போரின் மனதை நெகிழ்ச் செய்கிறது.

ஹெர்பர்ட் டெய்ல், வயது 94 மற்றும் மர்லின் பிரான்சிஸ் டெய்ல் வயது 88 என்ற தம்பதியர்  72 ஆண்டு கால தாம்பத்திய  வாழ்க்கையைப் பூர்த்தி செய்து,  12 மணி நேர வித்தியாசத்தில்  கடந்த வியாழக்கிழமை அன்று உயிர்நீத்தனர்.

இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள், 16 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் மற்றும்  நான்காவது தலைமுறையில் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இத்தம்பதியரின் காதல் கதை உள்ளூர் அகப்பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker