Latestமலேசியா

VIDEO – 13 வயது மாணவனை தாக்கிய காணொளி; சம்பந்தபட்ட மாணவனை போலீசில் ஒப்படைத்த தந்தை

மீரி, ஜூலை.17 – பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பகவடிவதை முடிவில்லாமல் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், 13 வயது மாணவனை, அதே பள்ளியில் பயிலும் 5 மாணவர்கள் அடித்து, உதைத்துத் துன்புறுத்திய காணொளி ஒன்று தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

Posted by Info Kemalangan Jalan Raya on Monday, 15 July 2019

கடந்த ஜூலை 8 தேதி இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக யாரிடம் சொல்லாக் கூடாது என 5 மாணவர்கள் மிரட்டியதால், பாதிக்கப்பட்ட அந்த 13 வயதுடைய சிறுவன் யாரிடமும் நடந்தவற்றைக் கூறவில்லை.

இதற்கிடையில், வகுப்பறை ஒன்றில் அந்த 5 மாணவர்களும் 13 வயது சிறுவனை அடித்து, உதைத்து தாக்கிய வீடியோ ஒன்று நேற்று ‘வாட்ஸ்ஆப்’-யில் வைரலாக பரவியுள்ளது.

அந்தக் காணொளியில் தனது மகன் தாக்கப்படுவதைக் கண்டு அச்சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளதாக மீரி மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி லிம் மேங் சியா தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக மீரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவில் சம்பந்தப்பட்டிருந்த மாணவன் ஒருவனை, அவர் தந்தையே முன் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார் என்றும் லிம் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, குற்றவியல் சட்ட, செக்‌ஷன் 147 கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker