Latestசினிமா

அமலா பால் கூறிய ‘அந்த பாட்னர் யார்’ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை ,ஜூலை.18- திருமணம் செய்து கொண்டு  குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை உள்ளது என்று நடிகை அமலாபால். கூறியுள்ளார் .

அமலாபாலுடன்  விவாகரத்து ஆன விஜய்க்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது. அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள ஆடை படம் திரைக்கு வருகிறது . பின் தன் முதல் கணவரின் மறுமணத்திற்குப் பின், திரைமறைவில் இருந்த தன் அந்தரங்க வாழ்க்கையை மெல்ல வெளியுலகிற்கு காட்ட தொடங்கியுள்ளார் அமலாபால்.

இந்த நிலையில் அமலாபால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது டைரக்டர் விஜய் இனிமையானவர். திருமணம் செய்து கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தன. இருவரும் சமூகத்தில் பிரபலமானவர்கள். எனவே வாழ்க்கை எங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றது. விவாகரத்துக்குப் பின் நண்பர்களாக இருந்த நிறைய பேர் என்னை விட்டு விலகி எதிரியைப் போல் பார்த்தனர்.

அதன் பிறகு இமயமலை சென்று அங்கு கிடைத்ததை சாப்பிட்டு மலைப்பகுதியில் ஆரம்பித்த அந்தப் பயணம் என் வாழ்க்கையை மாற்றியது. இப்போது வாழ்க்கையில் நிறைய முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாதாரண பெண்ணாக வாழ விரும்புகிறேன். நான் வாங்கிய விலை உயர்ந்த காரை விற்று விட்டேன். திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட வில்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளவும்- குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் ஆசை உள்ளது.

ஆடை படம் நடிக்கும் முன், நான் என் பார்ட்னரை கேட்ட பிறகே தான் எல்லா முடிவுகளையும் எடுத்தேன். கதையை கேட்டு, அவரிடம் ஆலோசித்த போது, இது ஒரு அருமையான வாய்ப்பு முதலில் உன்னை தயார் படுத்திக்கொள். உடலாலும் மனதாலும் முழுமையாய் தயாராகி இரு என்று சொன்னார் .அவரால்தான் இப்படத்தை ஒப்புக் கொண்டேன் என தெரிவித்துள்ளார் .

இதனால் அந்த ‘நபர் யார் ‘என்பதை நெட்டிசன்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அந்த நபருடன் தான் அமலாபால்-பாண்டிச்சேரியில் ஒன்றாக வசித்து வருவதாக கூறப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker