Latestமலேசியா

ஆயிரக் கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின !- மக்கள் அதிர்ச்சி

பாலி, ஜூலை 18 – பல்லாயிரக்காண மீன்கள் கரை ஒதுங்கிய காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

அந்தக் காணொளியில், மக்கள் பலர் அவற்றைப் பார்த்தவாறே அங்கு கரை ஒதுங்கிய மீன்களை அள்ளுகின்றனர்.

அந்த காணொளிப் பதிவு செய்த பலர், கடந்த செவ்வாய்கிழமை காலை   நடந்த 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு சம்பந்தம் உண்டென பதிவு செய்து வருகின்றனர்.

அந்தக் காணொளியை இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .மேலும் அந்தக் காணொளி உண்மையானது என பாலி  ‘நோஞ்ஞா பார்வாத்த’ மாவட்ட பேரிடர் ஆணையர்,  ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker