Latestஉலகம்

இப்படியும் ஒருவரால் முடி வளர்க்க முடியுமா?

பீகார், ஜூலை 18 – சில நாள்களுக்கு முடியைக் கழுவாவிட்டால், பலருக்கும் அது ஒரு சங்கடமான காரியமாக உணரப்படுகிறது.

ஆனால் பீகார் மாநிலத்தில், 63 வயதான சாகல் தேவ் என்பவர், 40 ஆண்டுகளாக தன் முடியைக் கழுவாவலும் வெட்டாமலும் வளர்த்து வருவது பலரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சாகலின் கூற்றுப்படி, அவருடைய தலைமுடி, கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதமாக எண்ணுகிறார். இந்தியாவின் பீகார், முங்கர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் அவரை ‘மகாத்மா ஜி’ என்று அழைத்து வருகின்றனர்.

தலைமுடியை வெட்ட வேண்டாம், குடிப்பதை நிறுத்த வேண்டும், மற்றும் புகைபிடிக்க வேண்டாம் என்று கடவுள் அவரிடம் கட்டளையிட்டதாக அவர் கூறுகிறார்.

தலைமுடியின் தூய்மையை உறுதி செய்வதற்காக, சாகல் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போதெல்லாம் வெள்ளைத் துணியைக் கொண்டு தன் முடியைக் கட்டிக் கொள்வார்.

இதற்கிடையில் பலர் இவரைச் சந்திக்கவும் படம் எடுக்கவும் தூரத்திலிருந்து வருவதற்குத் தயாராக உள்ளனர்.

இவர் வனத்துறையில் 31 ஆண்டுகளாக பணியாற்றியவர். மேலும் மனைவி ரூபியா தேவி, ஆறு குழந்தைகள் மற்றும் ஏழு பேரக்குழந்தைகளுடன் பீகாரில் வசித்து வருகிறார். தலைமுடி நிலைமையைக் கருதி, தனது மனைவிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker