Latestஉலகம்

உலகின் பணக்காரர்கள்:- 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸின் தயாள குணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்,ஜூலை.18- உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை புளூம் பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் .

அதாவது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக பில்கேட்ஸ் முதலி டத்தில் பெற்றிருந்தார். அவரை அமேசான் நிறுவனம் ஏற்கனவே பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் .

இந்நிலையில் தற்போது பிரான்சின் எல்வி்எம் எச் நிறுவன தலைமை செயல் அதிகாரி அர்னால்ட் இரண்டாம் இடத்தில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளி இருப்பது புளூம் பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர்களின் சொத்து மதிப்பு ஜெப் பெசோஸ் 125 பில்லியன், பெர்னாட் டாலர் 108 பில்லியன் டாலர் , பில்கேட்ஸ் 107 பில்லியன் டாலர். இந்நிலையில் சமீபத்தில் தனது நிறுவன அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் பில் கேட்ஸ். அவர் நன்கொடை வழங்காமல் இருந்திருந்தால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம் பெர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker