Latestமலேசியா

ஒரின சேர்க்கை காணொளி ; அரசியல் கட்சி தலைவரின் சதி திட்டம்?

கோலாலம்பூர், ஜூலை.18-  தனிப்பட்ட நபர் ஒருவரை அவமானப்படுத்தி அவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் தலைமையில் சதித்திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வந்தது, இந்த செக்ஸ் வீடியோ குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை  ஏற்படுத்தும் நோக்கத்திற்காக வெளியிடப்பட்ட இந்த காணொளிகளை, குறிப்பிட்ட தரப்பினர் லட்ச கணக்கில் செலவு செய்து உருவாக்கியுள்ளனர்.

அந்த  ஒரின சேர்க்கை உறவு காணொளி அசல்தான், அதில் பிரத்யேக வடிவமைப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை என்று சைபர்செக்குரிட்டி மலேசியா தெரிவித்துள்ளது.

ஆனால் அதில் உள்ள நபர்  பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கிடையாது என்று  முக அடையாள ஒப்பிட்டு தொழில்நுட்ப கருவி  முடிவு வெளியிட்டுள்ளது என அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த சோதனை முடிவுகள் அடிப்படையில்  அஸ்மின் குற்றமற்றவர் என்பதனை டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் உறுதிப்படுத்தவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker