Latestமலேசியா

சாலையில் “பாராங்” கத்தியுடன் திரிந்த இளைஞன் ; இணையத்தில் பரவும் காணொளி !

கோலாலம்பூர், ஜூலை.18- வீடமைப்பு பகுதி சாலையில் இந்திய இளைஞன் ஒருவன் தனது இரு கைகளிலும் “பாராங்” கத்தியை ஏந்திக் கொண்டு திரியும் காணொளி தற்பொழுது சமூக வலைத் தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளியின் துவக்கத்தில் இளைஞன் ஒருவன் கைகளில் கத்தியுடன் சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கிறான். பின் அவன் எழுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த பதாகையையும் கத்தியையை கொண்டு தாக்கி ஆவேசமாக பேசுகின்றான்.  அவன் அருகே உள்ள மற்றோரு இளைஞன் அவனின் செயல்களை கைப்பேசியில் படம் பிடிக்கின்றான்.

சுமார் 50 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை காரினுள் அமர்ந்தப்படி ஆடவர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இதனால் வெளியே அந்த இளைஞன் என்ன பேசுகின்றான் என்பர்து விளங்கவில்லை. காணொளியை பதிவு செய்தவர் இச்சம்பவம் நடந்த இடத்தின் முகவரியை குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதிலிருந்து அந்த சம்பவம் பந்திங்கில் உள்ள தாமான் டெலிமா எனுமிடத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.  ஆனால் அந்த இளைஞன் குறித்தும் ஏன் அவன் இது போல் நடந்து கொண்டான் ஆகிய தகவல்கள் உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker