Latestமலேசியா

சாலை விபத்தில் 18 வயது இளைஞன் மரணம்

மச்சாங், ஜூலை 18 – நேற்று இரவு இங்குள்ள கம்போங் டோக் போக்கில் ஏற்பட்ட விபத்து ஒன்றில், பலத்த காயமடைந்த இளைஞன், 4 மணி நேர போரட்டத்திற்குப் பின்னர் இரவு 10.45 மணியளவில் மரணமடைந்தார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது, ​​முகமட் சல்ஹாஸ்மி ஆஸ்மி, 18, மச்சாங் மருத்துவமனையில் (ஹோஸ்மாக்) இறந்தார்.

கம்போங் டோக் போக்கில் கோத்தா பாரு – கோலா கிராய் திசையில் இருந்து எஸ்.ஒய்.எம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த முகாமட் ஸல்ஹாஸ்மி, ​​பின்னால் வந்த வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாக மச்சாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஜிம்மி தெரிவித்தார்.

இச்சம்பவம்  ஜாலான் கோத்தா பாரு – கோலா கிராய் (முன் மப்ரூகா உணவகம்)  சாலை 33 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த பின்,  சிகிச்சைக்காக ஹோஸ்மாக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பயனின்றி, நேற்று இரவு இறந்தது உறுதி செய்யப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக போலீஸ் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இச்சம்பவத்தைப் பார்த்த அல்லது தகவல்களைக் கொண்ட நபர்களும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker