Latestமலேசியா

தந்தையைத் தொடர்ந்து, 24 மணிநேரத்தில் மரணமடைந்த மகன்!

கெடா, ஜூலை.18 – ஒரு வருட காலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த  70 வயது தந்தையின் இறுதி மூச்சை நேரில் பார்த்த மகன் துயரம் தாளாமல் 24 மணிநேரத்தில் மரணமடைந்தார்.

முகமட் அலி அவாங், வயது 70 கடந்த 2018 ஆண்டிலிருந்து பக்கவாத நோய்வாய்ப் பட்டதாகவும், அதே நோய் தனது மகன் ஹருல் ஷாரின், வயது 38 என்பவருக்கு கடந்த 2016 ஆண்டிலிருந்து இருந்துள்ளதாகவும் சல்மா தெரிவித்தார்.

முகமட் அலி, வலிப்புடன்  தனது மகன் கண் எதிரே இறுதி மூச்சை விட்டது அவனை மிகவும் மனம் நொருங்கச் செய்து விட்டது. அதிர்ச்சியும் துயரமும் தாளாது, கதறி அழுததில் ஹருல் உடம்பு குளிர் எடுத்து பின்பு வேர்வை சொட்ட ஆரம்பித்தது. உடனே, ஆம்புலைன்ஸை அழைத்து மருத்துவமனையில் சேர்த்ததாக அவரின் தாயார் குறிப்பிட்டார்.

அதன் பிறகு, அந்த அதிர்ச்சியிலேயே ஹருல் இரவு 11 மணியளவில் மரணமுற்றதாக அவர்  குறிப்பிட்டார். இதில் மனம் நெகிழ வைக்கும் தகவல் என்னவென்றால், தந்தை மகனும் 24 மணிநேர வித்தியாசத்தில் மரணமடைந்தனர்.

மேலும், ஹருல் என்பவருக்கு  திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஹருல் மிகவும் அன்பு குணம் கொண்டவர் என்று அவர் தாயார் குறிப்பிட்டார். இவ்விரு இழப்புகளும் அக்குடும்பத்திற்கு பேரிடியாக விழுந்துள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker