Latestமலேசியா

திரெங்கானு கடற்கரையில் மனிதரைக் கொல்லும் திமிங்கலங்கள்

கோல திரெங்கானு, ஜூலை 18- திரெங்கானு கடற்கரையில் இரு ஆள்கொல்லி, அதி பயங்கர திமிங்கலம் இரண்டு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு திமிலங்களும் கேர்த்தே கடலின் பெட்ரோனாசின் எண்ணெய் துரப்பண மேடைக்கருகில் காணப்பட்டு அதன் ஊழியர்கள் சிலர் அதனை படமெடுத்துள்ளனர்.

அந்தக் கடற்கரைப் பகுதியில் அம்மாதிரியான ஓர்கா திமிங்கலங்கள் வருவது இதுவே முதன் முறை என்றும் அந்த திமிங்கிலங்கள் ஆண், பெண்ணாக இருக்கலாம் என ரந்தாவ் அபாங் மீன் ஆராய்ச்சி மையத்தின் முகமட் தாமிமின் அலி அகமட் தெரிவித்தார்.

அந்த திமிங்கலங்கள் 6லிருந்து 8 மீட்டர் நீளமும் 5,000 மற்றும் 6,000 கிலோ கிராம் எடை கொண்டவைகளாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker